திருவிடைமருதூரில் காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகள் கையாளும் பயிற்சி!

By சி.எஸ். ஆறுமுகம்

திருவிடைமருதூர்: டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பி-க்கள் கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும், லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படிக் கையாள வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு டிஎஸ்பி-யான ஒய்.ஜாபர் சாதிக் தலைமையில் துப்பாக்கிகளைக் கையாளும் பயிற்சியை காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், எஸ்ஐ-க்களுக்கு பிஸ்டல், ரைபில் துப்பாக்கிகளை கையாள்வது, அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், அவசர காலத்தில் விதிமுறைகளுடன் அவற்றை உபயோகப்படுத்துவது, பொது மக்களை பாதுகாத்து சட்ட ஒழுங்கை சீர்படுத்துவது, தற்காப்பு வழிமுறைகள் குறித்து 2 மணி நேரம் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE