முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத் தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கு, வைப்பு நிதி பத்திரம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் வங்கிக் கணக்கு புத்தகம், பயனாளியின் வண்ண புகைப்படம் ஆகியவை அவசியம்.

இந்த ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலர் மாளிகை, 8-வது தளம், ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர்நல அலுவலர்களிடம் முதிர்வு தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE