7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கிராம கோயில் திறப்பு @ முதுகுளத்தூர்

By KU BUREAU

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோயில் சமாதானக் கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து வட்டாட்சியரால் திறந்து வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இறைச்சிகுளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பேராயிரமூர்த்தி அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறால் கோயிலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சி யர் சடையாண்டி முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று முன்தினம் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோயிலை திறப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இறைச்சிகுளம் கிராமத்துக்குச் சென்ற வட்டாட்சியர் சடையாண்டி, கோயிலை திறந்து கிராமத்தினரிடம் ஒப்படைத்தார். அதனையடுத்து அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல துணை வட்டாட்சியர் முத்துராமலிங்கம், காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன், சார்பு ஆய்வாளர் ராஜீவ்காந்தி கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE