‘நாம் தமிழர்’ கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது!

By KU BUREAU

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன், அக்கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும், தற்போதைய தமிழ்நாடு அரசு குறித்தும் கடுமையாக அவர் விமர்சித்து பேசினார். இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்வதற்காக சாட்டை துரைமுருகன் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். நெல்லை வீராணம் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்த போது, அங்கு சென்ற திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணைக்காக திருச்சி அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE