தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ப.தனபால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்தார்.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைப்பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001- 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.26 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது 2006-ல் ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்த னர். இந்த வழக்குவிசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகே.ஐயப்பன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த 2011-ல் சட்டப்பேரவை தலைவராக இருந்த ப.தனபால் அனுமதி அளித்துள்ளார். இதனால்,தனபாலும் இந்த வழக்கில் சாட்சி யாக சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு தன பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தனபால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்
» விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
» கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முன்னாள் அமைச்சர் தலைமையில் மறியல் @ மதுரை