சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உட்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் சென்னைகாவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில், தலைமையிட நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, நேற்று காலைசென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரவுடிகள் ஒழிப்பு குறித்த பல்வேறுஅறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இந்நிலையில், நேற்று 18 ஐபிஎஸ்அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக உள்துறை செயலர் பி.அமுதா வெளியிட்ட அறிவிப்பு:
தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக், தாம்பரம் காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம், மாநில குற்ற ஆவணகாப்பக கூடுதல் டிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி ஜி.வெங்கட்ராமன், நிர்வாகப்பிரிவு கூடுதல்டிஜிபியாகவும், அப்பதவியில் இருந்த வினித் தேவ் வாங்கடே,தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார், கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாகவும், அப்பதவியில் இருந்த சந்தீப் மிட்டல் மாநில சைபர் கிரைம் கூடுதல் டிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி ராஜீவ் குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு டிஜிபியாகவும், அப்பதவியில் கூடுதல் டிஜிபியாக இருந்த ஆர்.தமிழ்ச்சந்திரன், தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், தென்சென்னை கூடுதல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, தென்மண்டல ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த என்.கண்ணன்,தென்சென்னை கூடுதல் ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வடசென்னை காவல் கூடுதல் ஆணையராக இருந்த அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த கே.எஸ்.நரேந்திரன் நாயர் வடசென்னை காவல் கூடுதல் ஆணையராகவும், திருப்பூர் காவல்ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, சேலம் காவல் ஆணையராகவும், அப்பதவியில் இருந்த பி.விஜயகுமாரி, ஆயுதப்படை ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த எஸ்.லட்சுமி, திருப்பூர் காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிபிசிஐடி ஐஜியாக உள்ள டி.எஸ்.அன்பு, அதே பிரிவின் கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிப்பார்