பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதி அமைச்சருடன் புதுச்சேரி பேரவைத் தலைவர் சந்திப்பு!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அரசு கோரிய நிதியை ஒதுக்கி பட்ஜெட் தாக்கலுக்கு ஒப்புதல் தரக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத்தலைவர் செல்வம், “புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு கோரியுள்ள நிதியை ஒதுக்க வேண்டும். புதுவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

சென்னை - புதுவை வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க தேவையான முழு நிதியை ஒதுக்கி, அப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். திண்டிவனம் - புதுவை ரயில் பாதை பணிகளை தொடங்க வேண்டும். இதற்கான அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என கோரினேன். இக்கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்" என்று அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE