வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதந்தோறும் 8 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். அதன்படி வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு மே 20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்கள் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து சதுரகிரி செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.