திமுக ஆட்சியில் வன்னியர்கள் புறக்கணிப்படுகிறார்களா?: அமைச்சர் பரபரப்பு பதில்

By மு.அஹமது அலி

திமுகவோடு இணைந்து ஓபிஎஸ் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு, நாங்கள் யாருடனும் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது நியாயமானது தான்" என்றார்.

திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான நிவாரணம் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "இந்த ஆட்சி ஜாதி, சமயமற்ற மதச்சார்பற்ற ஆட்சி. அதனால், அனைத்து சமுதாயத்திற்கும் உரிய மரியாதை கிடைக்கும்" என்று பதிலளித்தார்.

மேலும், திமுகவோடு இணைந்து ஓபிஎஸ் செயல்பட்டார் என்று ஈபிஎஸ் வைத்த குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவர்களுடைய கட்சி பிரச்சனையை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் யாருடனும் இணைய வேண்டிய அவசியம் இல்லை" பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE