எஸ்.சி. எஸ்.டி. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர 9-ம் தேதிக்குள் விண்ணப்பம்: ஆட்சியர் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியருக்காக 22 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர், மாணவியர், கல்லூரி விடுதியில் பட்ட படிப்பு பயிலும் மாணவர், மாணவியர் ஆகியோர் சேரத் தகுதியுடையவர் ஆவர். மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் விண்ணப்பப்படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு அருகில் உள்ளவிடுதிகளில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் ஆதார் எண்,ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ள கைபேசி எண், இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் (கடந்த ஓராண்டுக்குள்), இணைய வழியில் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ், மாணவர்களின் EMIS/UMIS எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் விடுதிகளில் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காப்பாளர், காப்பாளிகளிடமிருந்து பெற்று வரும் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE