'மேகேதாட்டுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை': ஓபிஎஸ்

By மு.அஹமது அலி

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்ததுள்ளது. எனவே, அங்கு அணை கட்டுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று மதுரையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, மேகேதாட்டுவில் அணை கட்டுவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஏற்கனவே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஓராண்டு காலமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. சட்ட ஒழுங்கைச் சீராக பராமரிக்க முடியாத அரசாக விளங்குகிறது" என்று விமர்சித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE