கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் செய்த செயல்… போலீஸார் அதிர்ச்சி!

By மு.அஹமது அலி

மதுரையில் அனுமதியின்றி நிறுவ முயன்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைக் காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் நாளை தமிழகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் 24-வது வார்டில் திமுக தொண்டர்கள் அனுமதியின்றி ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருணாநிதியின் சிலையை இன்று நிறுவ முயற்சித்தனர். இதனை அறிந்த, செல்லூர் காவல் துறையினர் உரிய அனுமதி இல்லாமல் சிலை வைத்தது தவறு எனக் கூறி சிலையை அப்புறப்படுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தொண்டர்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்தியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE