தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம் : தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையர் @ கள்ளக்குறிச்சி

By KU BUREAU

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா, உறுப்பினர்கள் வட்டேபள்ளி ராம்சந்தர், லவ்குஷ்குமார் ஆகியோர் நேற்றுசந்தித்தனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கருணாபுரத்தில் நீண்ட நாட்களாக கள்ளச் சாராயம் விற்பனைநடைபெறுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டும் இதேபோல கொடூரமான நிகழ்வு தமிழகத்தில் நடந்துள்ளது. மாநில அரசுஎச்சரிக்கையாக இருந்திருந்தால், இந்த சோகத்தை தவிர்த்திருக்கலாம். அரசின் மெத்தனப்போக்குதான், தற்போதைய அவலத்துக்கு காரணம்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். மேலும், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளின் கல்விக்கு மாநிலஅரசு உதவ வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், ஆணையம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்” என்றார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய டிஎஸ்பி ஷன்மித் கவுர், துணை இயக்குநர் தினேஷ் வியாஸ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் புனிதபாண்டியன், ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத் துறைச் செயலர் லட்சுமி பிரியா, மாவட்டஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE