ஏகாம்பரநாதர் கோயில் சிலை கடத்தலில் ஈடுபட்டது யார் தெரியுமா?: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்

By கி.பார்த்திபன்

ஈரோட்டில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் மாவட்ட உலக சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற காவல் துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், " கோயில்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் பணியையும் சிவனடியார்கள் செய்ய வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு முதல் இப்போது வரை உள்ள ஆட்சியாளர்கள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தெய்வ விக்ரகங்களைச் சட்டப்படி பதிவு செய்யத் தவறவிட்டனர். அந்த சட்டக் கடமையை நிறைவேற்ற சிவனடியார்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை கடத்தலில் பெரிய, பெரிய அதிகாரிகள் சிக்கியுள்ளதால் வழக்கில் தாமதம் ஏற்படுகிறது. திருவாரூரில் 5 ஆயிரத்து 198 விக்ரகங்களின் உண்மைத் தன்மை கண்டறிந்ததில், 191 விக்ரகங்கள் போலி என்பது தெரிய வந்தது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE