ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: துரை வைகோகோரிக்கை

By என்.சன்னாசி

மதுரை: இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எம்.பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இலங்கை கடற்படையினால் ராமேசுவரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், அவர்களின் 3 விசைப்படகு களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தோடு, ஒரு விசைப்படகும் சிறை பிடிக்கப்பட்டது.

இதன்படி, 2018 முதல் 2024 வரை சுமார் 150 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், இவ்வாண்டு மட்டும் 40 க்கும் மேலான விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்படுவதும், உடைமைகள் சேதப்படுத்தப் படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கையின் இந்த அட்டூழியச் செயல்கள் நாளுக்கு, நாள் அதிகரிக்கின்றன.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான் மையுடன் நடக்கிறது. மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி, கைதான தமிழக மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்." இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE