கொட்டும் மழையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய காளையர்கள்

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 8 பேர் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள நல்லமரம் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கி மதியம் 1.45 வரையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 455 காளைகள் களமிறங்கின. மொத்தம் 186 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டி நடந்தபோது மழை பெய்தது. இருந்தாலும் நிறுத்தாமல் வீரர்கள் உற்சாகமாக மாட்டை அடக்கினர். இந்தப் போட்டியில் 10 வீரர்கள், 5 மாடு உரிமையாளர்கள், ஒரு பார்வையாளர் என்று மொத்தம் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் தீவிர காயமடைந்த 8 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

போட்டிகளை உசில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு.மணிமாறன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE