கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்களின் கோரிக்கை மனுக்கள்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் குவிந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

ஒவ்வொரு. வாரமும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் நடைபெற்றது. பொதுமக்கள் தங்களின் தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று (ஜூன்.24 ) காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இன்று காலை முதலே அதிக அளவிலான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து பட்டா, உதவி தொகைகள், தையல் இயந்திரம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதி இருந்ததாலும் தொடர்ந்து ஜமாபந்தி நடந்ததாலும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கூட்டம் நடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE