கள்ளக்குறிச்சி சம்பவம்: சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பாஜகவினர் 600 பேர் கைது

By டி.செல்வகுமார்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வள்ளுவர் கோட்டத்தை நோக்கி விரைந்தனர். முன்னதாக காவல்துறையினர் நாலா பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக் கணக்கான போலீசாரை குவித்து ஆர்ப்பாட்டம் நடத்த வரும் ஒவ்வொருவராக போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றி உடனுக்குடன் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பாஜகவினர் திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்தும் முழக்கமிட்டனர். தொடர்ந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE