கள்ளகுறிச்சி உயிரிழப்பு எதிரொலி: ஓசூர் ஆலைகளில் மெத்தனால் பயன்பாடு குறித்து ஆய்வு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கள்ளகுறிச்சியில் கள்ளசாரயம் குடித்து உயிரழந்தது சம்பவம் எதிரொலியால் ஓசூர் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளசாரயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து ஓசூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் எத்தனால் மற்றும் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் எவ்வாறு பயன்படுத்துப்படுகிறது. என ஆய்வு செய்ய எஸ்பி தங்கதுரை உத்திரவின் பேரில் போலீஸார் மாவட்டம் முழுவதும் உள்ள எத்தனால் மற்றும் மெத்தனால் பயன்படுத்தும் 15 தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதே போல் ஓசூரில் டிஎஸ்பி பாபுபிரசாந்த் தலைமையில் மத்திகிரி, சிப்காட், பாகலூர், சூளகிரி பகுதியில் உள்ள மெத்தனால் மற்றும் எத்தனால் பயன்படுத்தும் 5 தொழிற்சாலைகளி்ல் போலீஸார் ஆய்வு செய்தனர். சிப்காட் பகுதியில் உள்ள 3 தொழிற்சாலைகளில் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எத்தனால் மற்றும் மெத்தனால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.

லேப்களில் பயன்படுத்தும் போது, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியே கொண்டு செல்கின்றனரா என்பதை கண்காணிக்கப்படுகிறதா, இருப்பு வைத்துள்ள விவரம், அவைகளில் பயன்படுத்திய அளவு குறித்தும் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE