உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒலிக்கும் குரல்

By கவிதா குமார்

``உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விக்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு, அவர் எழுதிய கடிதத்தில், 'உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் போர் மூண்டுள்ள சூழலில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, அவர்கள் கல்விக்கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

' இந்திய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்கள் மிக அதீதமாக இருக்கிற காரணத்தால் தான், உக்ரைனில் அவர்கள் மருத்துவக் கல்வி பயில்கின்றனர். இதற்கு அவர்களது பெற்றோர் கடும் உழைப்பால் ஈட்டிய சொத்துகளை பிணையாகத் தந்து கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ள வெங்கடேசன், எனவே, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும், அவர்களது பிணைச்சொத்துகளை திரும்ப ஒப்படைக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE