கள்ளச் சாராய ஒழிப்பில் திமுக அரசு தோல்வி: ஓபிஎஸ் விமர்சனம்

By எஸ்.ஆனந்த விநாயகம்

சென்னை: கள்ளச் சாராய ஒழிப்பில் திமுக அரசு தோல்வியை கண்டிருக்கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிந்த பிறகு வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "கள்ளச் சாராய ஒழிப்பில் அரசு தோல்வியை கண்டிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களுக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய உயரக சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற வேண்டும்.

இந்த துயரச் சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஏற்கெனவே கள்ளச் சாராய மரண சம்பவம் நிகழ்ந்தன. இதைத் தடுக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE