ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு: விசாரணை கமிஷன் அமைப்பு

By காமதேனு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையால் தியாகராய நகர் ஸ்தம்பித்தது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு இன்று அமைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE