ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

By காமதேனு

தமிழகம் முழுதும் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 2.30 மணி நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தழிகம் முழுதும் நியாய விலை கடைகள் நேரத்தை மாற்றம் செய்து தமழக அரசு உத்தரவு பிறப்பிறத்துள்ளது. அதன்படி அரசு பிறப்பித்த உத்தரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை செயல்பட்டு வந்த நியாய விலை இனி மேற்கண்ட நேரங்களில் செயல்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, பெரும்பாலான நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கடை செயல்படும் நேரம் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை என்றும், கடை ஊழியர்கள் கடை திறக்கும் நேரம், கடைகளை திறந்து செயல்படுத்த வேண்டிய நெறிமுறைகளை குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் வேலை நேரம் குறித்த தகவல்களை குடும்ப அட்டைதாரர்கள் பார்க்கும் வண்ணம் நியாய விலைக் கடை முன்பு காட்சி படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE