எமர்ஜென்சி இருளைத் தந்தது யார்?

By ப.கவிதா குமார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய, ‘உங்களின் ஒருவன்’ புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்த நூலில், மு.க.ஸ்டாலின் தனது 23 ஆண்டு கால அரசியல் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை ராகுல்காந்தி வெளியிட்டதை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்ட காலம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி தான் இதைச் செய்தார். அவருடைய பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE