மயிலாடுதுறை மாவட்டத்தில் 67,989 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

By கரு.முத்து

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்களின் மூலம் 67989 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப் 27) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி வைத்தார். மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 543 மற்றும் நகர்புறங்களில் 39 என மொத்தம் 582 மையங்களில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

நகர்புறங்களில் 7695 குழந்தைகளுக்கும், கிராமபுறங்களில் 68269 குழந்தைகளுக்கும், புலம் பெயர்ந்த தொழிளாளர்களின் 41 குழந்தைகள் என ஆக மொத்தம் 76005 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களில் இன்று 67,989 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 114 புலம் பெயர்ந்த தொழிளாளர்களின் குழந்தைகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் 1784 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணியில் பொது சுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என 2311 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE