முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் நன்றி

By காமதேனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றியை ருசித்தது. அதிமுக மற்றும் பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகள் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்க உள்ளனர். மார்ச் 4ம் தேதி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சிதம்பரம்

இதனிடையே, தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சியை சேர்ந்த வெற்றி வேட்பாளர்களுடன் முதல்வரை சந்தித்து பேசினார். மேலும் இடதுசாரி கட்சியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது, தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வைத்ததற்கு அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE