குரூப்-1 ஹால் டிக்கெட் வெளியீடு: மே 21ம் தேதி குரூப்2 முதல் நிலை தேர்வு

By காமதேனு

குருப் 1 பணிக்கான முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதன்மை தேர்வு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும்.

தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 21ம் தேதி குரூப்2 முதல் நிலை தேர்வு

இதனிடையே, குரூப்2 மற்றும் குரூப்2ஏ பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்காணல் மூலம் 116 இடங்கள் உள்பட 5,529 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. வரும் 23ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அரசு அறிவித்தப்படி பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 21ம் தேதி குரூப்2 முதல் நிலை தேர்வு நடைபெறும். தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேர்காணல் நடைபெறும். நேர்காணல் இன்றி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE