முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழா: சோனியாவுக்கு நேரில் அழைப்பு

By காமதேனு

முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ பாகம்-1 நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்துள்ளார் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில், தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பாஜக கூட்டணி கட்சிகளைத் தவிர்த்து, தேசிய கட்சித் தலைவர்களுக்கும் மற்றும் மாநிலத்தை தனித்து ஆளும் முதல்வர்களுக்கும் திமுக அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்து, திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் பாகம்-1’ புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE