அண்ணாமலை நகர், மணல்மேடு பேரூராட்சிகளும் திமுக வசமாயின

By கரு.முத்து

கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலை நகர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பேரூராட்சிகளை பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியுள்ளது.

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், பெரும்பான்மைக்குத் தேவையான 8 இடங்களை திமுக கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலம் அண்ணாமலை நகர் பேரூராட்சி திமுக வசமாகிறது. இதில் அதிமுக 5 வார்டுகளையும், பாமக ஒரு வார்டிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மணல்மேடு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக ஆகியவை தலா ஒரு இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE