மதுரையில் தலா 2 வார்டுகளில் மதிமுக, காங்கிரஸ், சிபிஎம் வெற்றி

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக 77 வார்டுகளிலும், காங்கிரஸ் 9, சிபிஎம் 8, மதிமுக 4, விசிக 2 வார்டுகளிலும் போட்டியிட்டன. இன்று நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரையில் 30 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் திமுக 17 இடங்களிலும், சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், விசிக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. அதாவது, முடிவு வெளியான 30 வார்டுகளில் 24 இடங்களைத் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இன்னும் 21 இடங்களில் திமுக வென்றாலே. மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக மொத்தமே 15 வார்டுகள் வரையில்தான் வெற்றிபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE