சேலம் மாவட்டம், எடப்பாடி (இடைப்பாடி) நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக சார்பில் முன்னாள் நகராட்சித் தலைவரும், அதிமுக ஜெ பேரவை நகர் செயலாளருமான கதிரேசனே இந்த முறை வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இது கவுரவப் பிரச்சினை என்பதால், பழனிசாமியே நேரடியாக அவருக்கு வாக்குக்கேட்டார். இதேபோல திமுக கூட்டணியும் தீவிரமாக தேர்தல் வேலை செய்தது.
இதுவரையில் மொத்தம் 4 வார்டுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் 2 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. போட்டி சரிசமமாக இருப்பதால், தலைவர் பதவிக்கு இழுபறி ஏற்படும் என்று தெரிகிறது.