கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி 1-வது வார்டில் வெற்றிபெற்றுள்ளது. இது நாம் தமிழர் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 200 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சி வாகை சூடியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சோபா ஆன்சி, 417 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடந்தமுறை ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடந்தபோதும், குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் வென்றது. அரசியல் ரீதியாக மக்கள் வாக்களித்து, நாம் தமிழர் கட்சி வென்ற ஒரே வார்டாக அப்போது அந்த வெற்றியே இருந்தது. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலிலும் 50 ஆயிரம் வாக்குகள் பெற்று, நாம் தமிழர் கட்சி கவனிக்கவைத்தது.
இப்போது அதன் தொடர்ச்சியாக, கப்பியறை பேரூராட்சியில் ஒன்றாவது வார்டை கைப்பற்றியுள்ளது நாம் தமிழர் கட்சி.