நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சியினரும் வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள்.
விருத்தாசலம் நகராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2-வது வார்டில் தேமுதிக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
5-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து 6-வது வார்டில் எட்டிப்பார்த்தால், பாமக வேட்பாளர் குமாரி முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
7 மற்றும் 8-வது வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், விருத்தாசலம் நகராட்சி பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பை வழங்கி வருகிறது.