அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையை மையப்படுத்தி அரசியல் செய்வதைவிட சேலத்தை மையப்படுத்தியே அரசியல் செய்துவருபவர். கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்தாலும்கூட, இன்னமும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியைக் கைவிடாமல் தக்கவைத்திருக்கும் அவர், இந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் கூடுதலாக தேர்தல் வேலைகளைக் கவனித்தார்.
இந்தச் சூழலில் சேலம் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மதியம் 2 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 60 வார்டுகளில் இதுவரையில் ஓரிடத்தில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. ஆனால், 32 இடங்களில் திமுக வென்றிருக்கிறது. அதிமுக 3 இடத்தில் மட்டுமே வென்றிருக்கிறது.
இதேபோல கோவையில் 33 ( மொத்த வார்டு100), ஈரோட்டில் 21 (60), கரூர் 40 (48) என்று திமுக கூட்டணி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அந்த மாநகராட்சிகளில் முறையே அதிமுக 1, 2, 2 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.