நீலகிரி மாவட்டத்தில் காலை 11 மணி அளவில் 20.87 சதவீத வாக்குப்பதிவு

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் காலை 11 மணி வரையில் பேரூராட்சிகளில் 22.42 மற்றும் நகராட்சிகளில் 19.70 என 20.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

உதகை காந்தல் வாக்குச்சாவடியில் வாக்களிக்க மாற்று திறனாளியை அழைத்து வருகிறார்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில், 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்கள் என மொத்தம் 294 பதவியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 291 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 291 பதவியிடங்களுக்கு மொத்தம் 1253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதட்டமான வாக்குச்சாவடியான காந்தல் சிஎஸ்ஐ பள்ளயில் குவிந்த மக்கள்.

வாக்களிக்க வரும் வாக்காளர்கள்

இந்தத் தேர்தலில் 1,55,380 ஆண் வாக்காளர்களும், 167723 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,23,111 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இத்தேர்தலுக்கு 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 55 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்களிக்க வந்த மாற்று திறனாளிக்கு கரோனா பாதுகாப்பு நடைமுறைகள்

வாக்களிக்க வரிசையில் நிற்கும் மக்கள்

காலையில் ஆரம்பித்தபோது மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மெல்ல சூடுபிடித்தது. உதகை காந்தலில் உள்ள பதற்றமான சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் காலை 11 மணி வரையில் பேரூராட்சிகளில் 22.42 மற்றும் நகராட்சிகளில் 19.70 என 20.87 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE