கரோனா: தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

By காமதேனு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்; தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பாசிடிவ் நபர்களின் தொடர்பில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து ரயில் நிலையங்களில் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர்.. 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அறிகுறிகள் இருப்போருக்கும் முன்னுரிமை வழங்கி பரிசோதனை நடத்தப்படும்.

மேற்குறிப்பிட்டவர்களை தவிர மற்றவர்களுக்கு தேவையில்லாமல் பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 1,00,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் தொற்று குறைந்து வருவதால் இதை 60,000ஆக குறைக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE