`கடமையை செய்யவில்லையென்றால் ராஜினாமா'- கமல்ஹாசன் அதிரடி

By காமதேனு

"தனது கட்சி வேட்பாளர்கள் பலர் கடமையை செய்யவில்லை எனில் பதவியை விட்டு விலகுவதாக எழுதிக் கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். என்ன முடியுமோ அதை சொல்லி செய்து காட்டுவோம்" என்று கோவை பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக பேசினார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீநி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோவை பாப்பநாயக்கன் பாளையம் காய்கடை பகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், "பிற கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் செய்வார்கள். பிற வேட்பாளர்கள் செய்வதை இவர்கள் செய்ய மாட்டார்கள்.

சூயஸ் திட்டத்தில் சிறுவாணி தண்ணீரை விற்ககூடாது என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறியவர்கள் தற்போது அத்திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த ஊழல் ஆட்சியில் சந்தோசமாக வாழ்வது கொசுக்கள் மட்டும் தான், மக்கள் அல்ல. தனது கட்சி வேட்பாளர்கள் பலர் கடமையை செய்யவில்லை எனில் பதவியை விட்டு விலகுவதாக எழுதிக் கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். என்ன முடியுமோ அதை சொல்லி செய்து காட்டுவோம். அதற்கான உதவியை மக்கள் செய்ய வேண்டும். தங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மாதம்தோறும் ரிப்போர்ட் கார்டு கொடுப்பார்கள். அதை மற்ற வேட்பாளர்கள் செய்வார்களா" என கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE