75,88,159 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு!- தமிழக அரசு வெளியிட்ட தகவல்

By காமதேனு

தமிழகத்தில் 75,88,159 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,159 பேர் காத்திருக்கின்றனர். இதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17,81,695 பேரும், 19 முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 16,14,582 பேரும் பதிவு செய்து உள்ளனர். 24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 28,60,359 பேர் உள்ளது.

மேலும், 36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 13,20,337 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,386 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 71,566 பேரும், பெண்கள் 37,261 பேர் உள்பட 1,08,827 பேரும் பதிவு செய்துள்ளனர். பார்வையற்ற ஆண்கள் 11,776 பேரும், பெண்கள் 5,318 பேர் உள்பட 17,094 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9,437 பேர், பெண்கள் 4,467 பேர் என மொத்தம் 13,904 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3,57,963 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,67,468 நபர்களும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்" என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE