தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம்!- இன்று திடீர் சரிவு

By காமதேனு

தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.37,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு நிலையான விலையில் தங்கம் விலை இல்லாததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வாங்கும் திறன் குறைந்து வருகிறது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.36,192க்கு விற்கப்பட்டது. கடந்த 11ம் தேதி வரை ஒரு பவுன் ரூ.36,880க்கும் விற்கப்பட்ட நிலையில், 12ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,720க்கும் விற்கப்பட்டது.

இதன் பின்னர் கடந்த 14ம் தேதி தங்கம் விலையில் சிறிய மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,560க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,904க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலையில் இன்று திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.37,320க்கும் விற்கப்படுகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ. 67,80க்கு விற்பனையாகிறது. மாலையில் இந்த விலை உயருமா? அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE