சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான கோடைக்காலம் தொடங்கி கடந்தசில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், தினசரி மின்தேவை அதிகரித்து வந்தது.
இதனால் இம்மாதம் 2-ம் தேதி மின்தேவை எப்போதும் இல்லாத அளவாக 20,830 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழைபெய்து வருவதால் தினசரி மின்தேவை கடந்த 16-ம் தேதியன்று 4,094 மெகாவாட் குறைந்து 16,736 மெகாவாட் என்ற அளவில் இருந்தது.