முதல்வருடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமர் சந்திப்பு

By காமதேனு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கன்னட நடிகர் சிவ ரஜ்குமார் இன்று நேரில் சந்தித்தார்.

கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகரான மறைந்த ராஜ்குமாரின் மகனும், கன்னட நடிகருமான சிவ ராஜ்குமார், இன்று(பிப்.13) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்தார். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின்போது, சிவ ராஜ்குமாரின் சகோதரரான புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். கடந்த அக்டோபரில் மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். சிவ ராஜ்குமார், புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதரர் ஆவார்.

இந்த சந்திப்பின்போது துர்கா ஸ்டாலின், கீதா சிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE