`இது ஏற்புடையதா?'- ஆளுநருக்கு சபாநாயகர் சரமாரி கேள்வி

By காமதேனு

"நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல" என்று சபாநாயகர் அப்பாவு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "கடந்தாண்டு செப்டம்பர் 13ல் நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 142 நாட்களுக்கு பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ம் தேதி சபாநாயகரான எனக்கு திருப்பி அனுப்பினார். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதன்மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் விலக்கு பெற மசோதா வழிவகை செய்யும். பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்கள் சேர மசோதா வழிவகை செய்கிறது" என்று கூறிய சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்தார். உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என ஆளுநர் கூறியுள்ளார். நீதியரசர ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையை அடிப்படையாக கொண்டு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர், சபாநாயருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். என பொறுப்பில் இருந்து கடுகளவும் தவற மாட்டேன். நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை; உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆளுநர் ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல. இயன்ற அளவில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால், 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பி உள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா?" என்று கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE