தீ பாதுகாப்பு நடவடிக்கை கட்டாயம்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

By KU BUREAU

சென்னை: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், அனுப்பிய சுற்றறிக்கை:

கல்வி நிறுவன வளாகங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன்படி தங்கள் வளாகங்களில் தீ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் தகுதியான அதிகாரிகளிடம் இருந்து சரியான தீ பாதுகாப்பு சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும்.

இதுதவிர தீயை அணைக்கக் கூடிய கருவிகள், அதற்கான எச்சரிக்கை அமைப்புகள் இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE