விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

By KU BUREAU

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக, நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடத்தப்பட வேண்டியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகின்றன.

இதனால் நடைபெற உள்ள இடைத்தேர்தல் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் என அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை. குறிப்பாக கட்சி தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பவில்லை.

ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோம் என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும் இன்றைய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. எனவே தேமுதிக இத்தேர்தலை புறக்கணிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE