ரேஷன் பொருள் தரமில்லையா... ஊழியர்கள் திருப்பி அனுப்பலாம்!

By காமதேனு

நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமில்லை என்றால், திருப்பி அனுப்பலாம் என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கும் அரிசு, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏழை மக்கள் ரேஷன் அரிசியை நம்பித்தான் இருக்கின்றனர். அந்த அரிசியில் புழு, வண்டுகள் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

இப்படித் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாய் இருப்பதால், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE