மயிலாடுதுறையில் வேட்பாளராக 75 வயது மூதாட்டி

By கரு.முத்து

நாம் தமிழர் கட்சியின் சார்பில், மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த 23 வேட்பாளர்களிலும் மிக முக்கிய வேட்பாளராக அனைவருக்கும் ஒரேநாளில் நன்கு அறிமுகமாகியிருக்கிறார் சொர்ணாம்பாள்.

தள்ளாத வயதிலும் தளராத உற்சாகத்தோடு மக்கள் சேவை செய்ய தேர்தலில் களமிறங்கி இருக்கும் சொர்ணாம்பாளை, நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக அழைத்து வந்தனர். நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயிகள் சின்னத்தை குறிப்பிடும் விதமாக, கையில் கரும்போடு வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார் சொர்ணாம்பாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE