“இருள்கட்டிக் கிடக்கும் ஏழைக் குடிகள் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன” -கவிஞர் வைரமுத்து

By காமதேனு

“நாளை முதலமைச்சர் கூட்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவை ராஜ்பவனும் ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல இருள்கட்டிக் கிடக்கும் ஏழைக் குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன” என்று நீட் விலக்கு மசோதா குறித்து கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில், நீட் விலக்கு கோரி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்காக புதிய சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக நீட் விலக்கு சட்ட மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் 4 மாதங்களாக காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு குறித்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைத்தார். ஆளுநரின் இந்த முடிவு, தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதில், “திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை, மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை. நாளை முதலமைச்சர் கூட்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவை ராஜ்பவனும் ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல இருள்கட்டிக் கிடக்கும் ஏழைக் குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE