வெளிநாடு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க ரூ.1 கோடி நிதி!

By காமதேனு

வெளிநாடு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுப்பதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ் கற்பிப்பதற்காக வசதியை ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், தமிழை வெளிநாட்டு, வெளிமாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அகரம் முதல் சிகரம் வரை பல படிநிலைகளாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு, சான்றிதழ் தேர்வு நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் பரப்புரை கழகம்மூலம் தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சார பரப்புரை பணிகள் ஒலி - ஒளி உச்சரிப்புடன் பாடப்புத்தகத்தை வடிவமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE