இதுவரை ரூ.53.72 லட்சம் பறிமுதல்!- தமிழக தேர்தல் பறக்கும் படை அதிரடி

By காமதேனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நடந்த வாகன சோதனையில் இதுவரை ரூ.53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நபர் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு மேல் பணம் கொண்டு போனால் உரிய ரசீது காண்பிக்கப்பட வேண்டும். அப்படி ரசீது இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நடந்த வாகன சோதனையில் இதுவரை ரூ.53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பறக்கும் படையினரால் ரூ.53.72 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.40.40 லட்சம் ரொக்கம், 15 லேப்டாப்கள், 40 செல்போன்கள், 140 குத்து விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE