வைகோவுக்கு கரோனா தொற்று உறுதி

By காமதேனு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதியானதால், சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் வைகோ.

கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே, மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE